search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைம் பத்திரிக்கை"

    பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையுடன் டிரம்ப் இருக்கும் புகைப்படத்தை டைம் பத்திக்கை தனது அட்டைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trump #MelaniaTrump #Timemagazine
    நியூயார்க்:

    அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

    இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்படும் டிரம்பின் சட்டத்தினை எதிர்க்கும் வகையில் டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் டிரம்ப் , ஒரு குழந்தையுடன் இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. வெல்கம் டூ அமெரிக்கா என்ற வாக்கியத்துடன் உள்ள டிரம்ப் புகைப்படம் அந்த புகைப்படத்தில்  உள்ள குழந்தை தனது தாயை தேடி அழுகிறது. அது டிரம்ப் அரசின் குடியேற்ற விதிகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



    டிரம்பின் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளை காண செல்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ ரியலி டோண்ட் கேர். டூ யு? என்ற இந்த வாக்கியம் அடங்கிய சர்ட் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. #Trump #MelaniaTrump #Timemagazine

    ×